ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

" alt="" aria-hidden="true" />


ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு 


80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்கு கூடுதலாக வழங்கப்படும்.


ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும் 


விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.


விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்.


8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்.


முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்-இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்.


100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு.


விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.


20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்


உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்


தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் தொகையை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு வழங்கும் 


15 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள சம்பளதாரர்களுக்கு, அடுத்த 3 மாதங்களுக்கான வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும் 


100 ஊழியர்களை கொண்ட நிறுவனத்தில், ரூ.15000க்கும் கீழ் 90% பேர் சம்பளம் வாங்கும் பட்சத்தில், இந்த திட்டம் பயனளிக்கும்.