" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் - குமராட்சி ஒன்றியம் உட்பட்ட உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் நம் மக்கள் பீதி அடைய வைத்துள்ளது தடுப்பு நடவடிக்கை நமது குமராட்சி ஒன்றியம் மிகவும் பின்னடைவில். தடுப்பு நடவடிக்கை துரிதப்படுத்தவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்திடவும் மக்களை பாதுகாக்க உடனடியாக தங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான நிதி ஆதாரம் இல்லாததால் தவிக்கும் இந்த நேரத்தில் தங்களால் முடிந்த அளவிற்கு கிருமிநாசினி பிளீச்சிங் பவுடரும் இன்னும் பல தடுப்பு நடவடிக்கைகளும் செய்து வருகிறார்கள் இது பற்றாக்குறையாக உள்ளது. ஆகையால் வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் மாவட்ட ஆட்சியர் அளவிலும் அரசாங்க அளவிலும் இதுவரை எந்த ஒரு நிதி உதவியும் கிடைக்க பெறவில்லை எனவே மக்களை பாதுகாக்கவும் கொரோனா தடுக்கவும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் போதிய நிதி ஆதாரங்களை விடுவிக்க வேண்டும். இக்கோரிக்கையை அவசர பணியாக கருதி செய்திட வேண்டும். ஆகையால் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் இன் பொது நிதியிலிருந்து ரூபாய் 10000 வீதம் 57 ஊராட்சிக்கும் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
குமராட்சி ஊராட்சி ஒன்றிய தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மற்றும் உடன் கௌரவத் தலைவர் கே பாபு ராஜன் மாங்குடி செயலாளர் பாலா அறவாழி வரகூர் துணை தலைவர் ஜி. மாரியப்பன் தண்டேஸ்வர நல்லூர் குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பில் இம்மனுவை வட்டார வளர்ச்சி அலுவலகம் கோரிக்கை மனுவை அளித்தார்கள்