கொடைக்கானல் அருகே கொரோனோ வைரஸ் நிவாரண பொருட்கள் குதிரைகள் கொண்டுசென்ற மலைக்கிராம மக்கள்

கொடைக்கானல் அருகே கொரோனோ வைரஸ்  நிவாரண பொருட்கள் குதிரைகள் கொண்டுசென்ற மலைக்கிராம மக்கள்


" alt="" aria-hidden="true" />


கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்தது பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளானார்.


 இந்த நிலையில் தமிழக அரசு நிவாரண நிதியாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து.
 அதன்படி இந்த பொருட்கள் தற்போது பொது மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது.     திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வட்டக்கானல்  பகுதியிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் மலை கிராமம் உள்ளது.


 இங்குள்ள மக்களுக்கு ரூபாய் 1000 மற்றும் அரிசி சர்க்கரை பருப்பு பாமாயில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதில் தாசில்தார் வில்சன், முன்னாள் நகர சபை தலைவரும் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான ஸ்ரீதர்,
 துணை தலைவர் ஜாபர் சாதிக் ஆகியோர் கலந்துகொண்டு மலை கிராமத்தை சேர்ந்த 120 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.


 அப்போது மக்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கினார் இதேபோல் வெல்லகவி கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அவற்றை குதிரை மூலமாவும் தலைச்சுமையாக 7 கிலோமீட்டர் தொலைவில் தங்கள் வீடுகளுக்கு நடந்து சென்றனர்